Tuesday, November 29, 2011

சூரிய நமஸ்காரம்



 சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய வணக்கமுறை (இலக்கியத்தில் "சூரியனுக்கு வணக்கம்") என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இந்து கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும். இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆசனம்பிரணாயாமம்மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான சாதனாவாக இது உள்ளது.

        பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது இயக்கவியலில் செயல்படுத்தப்படும் வரிசையில் பன்னிரண்டு ஆசனங்களை ஒன்றாய் கொண்டுள்ளது. இந்த ஆசனங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பை முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட மூடியும். வழக்கமான வழியில் செயல்படும் போது ஒவ்வொரு ஆசனமும் (ஆறாவது ஆசனத்தைத் தவிர்த்து, மூச்சோட்டமானது வெளிப்புற தாமத்துடன் கடைபிடிக்கப்படும்) மாறி மாறி நிகழும் மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் மூச்சை வெளியிடுதலுடன் நகரும். சூரிய நமஸ்காரத்தின் ஒரு முழுச் சுற்றானது இந்த வரிசையின் வழியாக எதிர்பக்கத்திலுள்ள காலை முதலில் நகர்த்தும் இரண்டாவது தொகுப்பில் மாறுவதுடன் பன்னிரண்டு நிலைகளுடைய இரண்டு தொகுப்புகள் இதில் கருதப்படுகின்றன.
நவீன யோகா பராம்பரியத்தின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புபவர்கள் இதை சூரிய உதயத்தில் செய்வதற்கு ஆயத்தமாவர். ஒரு நாளில் மிகவும் 'ஆன்ம ரீதியாக உகந்த' நேரமாக இந்நேரத்தை பழமை விரும்பிகள் கருதுகின்றனர்.





Thursday, November 24, 2011

மூச்சுப்பயிற்சி

ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே?
ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.
எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.
ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.
பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.
அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.
தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.
மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.
முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.
மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.
ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.

ஸ்ரீ ரமண மகரிஷி


‌‌ஸ்ரீ ரமண மகரிஷி  ஒலி புத்தகம்   கேட்டு மற்றும்  பதிவிறக்கம் செய்து‌  கொள்ளலாம்.

http://www.sriramanamaharshi.org/twnultirattu.html

நம் புண்ணிய பாரத தேசத்தில் தோன்றிய ஞான வள்ளல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். ஹரியாதி இதர ஜீவர்கள் அனைவரின் ஹருதிய குகையில் ”அவர் அறிவுசொரூபமாக” என்றும் ஒளிர்கின்றார். ஆகையால் அவரை “அறிவ” தென்பது நாம் நம்மையே அறிவதாகும். நம்மை நாம் அறிந்து கொள்ள பகவான் நமக்கு வகுத்துத் தந்துள்ள சாதனை முறைகள் பல. அன்பர்கள்பால் அவர் கருணையுள்ளம் பூண்டு தன்னுபதேசங்கள் காலப்போக்கில் திரிபுறாவண்ணம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பாடல்களாகப் பற்பல அமைப்பில் வடித்துத் தந்துள்ளார். அவையாவும் துதிப்பாடல்களாகவும் மற்றும் உபதேச வெண்பாக்களாகவும் கீர்த்தனை வடிவிலும் ஸ்ரீ ரமண நூல்-திரட்டில் இடம் பெற்றுள்ளன.
இந்நூல்-திரட்டின் சிரவண, மனனங்களின் அளவற்ற ஆன்மீகப் பயனை உணர்ந்த அன்பர்கள் பலர், ஸ்ரீ பகவான் திருமேனி தாங்கியிருந்த காலத்திலேயே ”ஸ்ரீ ரமண சந்நிதிப் பாராயண முறை”யை ஏற்படுத்தி ஆன்மலாபம் அடைந்து வந்தனர். இது ஸ்ரீ பகவான் கந்தாசிரமத்திலிருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டதாகும். கந்தாசிரமப் பாராயண முறையாக 1920 ஆம் ஆண்டு காலத்தில் அமைந்திலிருந்து. பிறகு ஸ்ரீ பகவான் அவ்வப்போது அன்பர்களுக்காக அருளிச் செய்த உபதேச நூல்களும் தக்க காலத்தில் தமிழ்ப்பாராயண முறையில் சேர்க்கப்பட்டு வந்தன.
இத்தமிழ்ப் பாராயணத்தில் கலந்துகொண்டு பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு அவற்றைச் சுலபமாக மனப்பாடம் செய்வதற்காக ஸ்ரீ பகவான், வெண்பாப் பாடல்களைக் கலிவெண்பா வடிவமாக அமைத்தும் மற்ற பாடல்களுக்குத் தலைப்புக் கவிகளையும் அருளியுள்ளார்.



Tuesday, November 15, 2011

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.

இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.

ஞான முத்திரை

கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

வருண முத்திரை

பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.

சூன்ய முத்திரை

கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.

இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.




ப்ராண முத்திரை

கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.

இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.

அபான முத்திரை

கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.

இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.

அபான வாயு முத்திரை

அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது

இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

லிங்க முத்திரை

படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.

சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.

முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.

இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.


ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச்சைக்கு இணை என்று சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமையாக வெளியாகி விடவில்லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? 




Thanks to http://enganeshan.blogspot.com/

Monday, November 14, 2011

மூச்சுப் பயிற்சி



நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது, மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது, இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன,
உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைக் கொண்டு மூச்சுப் பயிற்சி என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்,
மேலும் மூச்சுப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் உயிருடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர், இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது, நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு மூச்சுப் பயிற்சி வழி வகுக்கிறது,

Friday, November 11, 2011

அண்ணாமலை அதிசயச் செய்திகள்



$ இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி கோவில் மூலவரின் பின்புறம் இருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது.நாடி ஜோதிடத்தில்,திருஅண்ணாமலையின் மீது இருப்பதாக தெரிகிறது.மலைச்சரிவில் மூங்கில் தோப்பும்,குள்ள நெல்லி இனமும் அபூர்வ மணம் வீசும் அதியப் பூவும் செங்கல் சிதைவுகளும் சுனையும் கூடிய வித்தியாசமான சூழலில் அமைந்திருக்கிறது.யாராவது இந்த மாதிரியான அமைப்பை அண்ணாமலை மீது பார்த்திருக்கிறீர்களா?

$ பால் பிரண்டன் என்ற மேல்நாட்டுக்காரர்,ரமண மகரிஷியின் பக்தர்.இவர் 1930 இல் திரு அண்ணாமலையில் சிறிது காலம் வாழ்ந்தார்.தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதிவெளியிட்டார்.அதில் ரமண மகரிஷி பற்றியும்,திரு அண்ணாமலை பற்றியும் எழுதியிருந்ததால்,அதன்பிறகு,இங்கு ஐரோப்பக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் வரத் துவங்கியது.
$ அண்ணாமலை கோபுரங்களைப் பற்றி எம்.ஹெச்.க்ரேவி என்பவர் அருமையான ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

$ நள்ளிரவு 12 மணிக்கு அண்ணாமலை மீது சித்தர்கள் பூஜை செய்வார்கள்.அப்போது எழுப்பப் படும் சங்கொலியை அண்ணாமலை பக்தர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர்.
$ஆன் மார்ஷல் என்பவர் எழுதிய இந்தியாவில் குருவைத் தேடி என்ற நூலும், பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி என்ற நூலும் பிரபலமானவை.இவைதான் எதிர்காலத்தில் ஐரோப்பாக் கண்டமே இந்து தர்மத்துக்கு மாறுவதற்குக் காரணமாக இருக்கப் போகின்றன.

$ ஆப்தர் ஆஸ்பர்ன் என்பவர் எழுதிய ரமண மகரிஷி அண்ட் தி பாத் ஆப் செல்ப் நாலட்ஜ் என்ற நூல் இங்கிலாந்தில் ஒரு மகத்தான ஆன்மீக புரட்சியை உருவாக்கிவிட்டது.

$ மே 2001 முதல் வாரத்தில் இரவு 9 மணிக்குள் ஒரு பறக்கும் தட்டு வந்தது.திரு அண்ணாமலையின் மலையை ஒரு சுற்றிவிட்டு,தென் மேற்கு திசையில் போய் மறைந்தது.

$ 14.4.1950 இரவு 8.47க்கு அண்ணாமலையில் இரமண மகரிஷி முக்தி அடைந்த நேரம் இது.அப்போது வானில் ஒரு நட்சத்திரம் மின்னி,வடகிழக்கில் நகர்ந்தது.அண்ணாமலையில் கலந்தது.ஜோதிடர்கள் இந்த நேரத்தை வைத்து ஆன்மீக ரீதியாக ஜோதிட ஆராய்ச்சி செய்யலாம்.

$ காக புஜண்டர் வழி நாடி ஜோதிடம் சொல்லும் ஒரு முஸ்லீம் குடும்பம் திரு அண்ணாமலையில் இன்றும் இருக்கின்றனர்.
$ மூன்று பவுர்ணமிகளுக்குத் தொடர்ந்து அண்ணாமலைகிரிவலம் சுற்றினால்,எப்பேர்ப்பட்ட பிரச்னையும் தீர்ந்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்ட நம்பிக்கை!!!

$ செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றால்,கோடி கோடியாக மோட்சம் கிடைக்கும் என்பது சேஷாத்ரி மகரிஷியின் அருள்வாக்கு!!!

நன்றி: திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000,எழுதியவர்:ஏ.டி.எம்.பன்னீர்செல்வம், விஜயா பதிப்பகம்,20,ராஜ வீதி,கோயம்புத்தூர்-1.தொலை பேசி:0422-2394614,2382614. விலை ரூ.50/-

ஓம்சிவசிவஓம்