Thursday, November 24, 2011

ஸ்ரீ ரமண மகரிஷி


‌‌ஸ்ரீ ரமண மகரிஷி  ஒலி புத்தகம்   கேட்டு மற்றும்  பதிவிறக்கம் செய்து‌  கொள்ளலாம்.

http://www.sriramanamaharshi.org/twnultirattu.html

நம் புண்ணிய பாரத தேசத்தில் தோன்றிய ஞான வள்ளல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். ஹரியாதி இதர ஜீவர்கள் அனைவரின் ஹருதிய குகையில் ”அவர் அறிவுசொரூபமாக” என்றும் ஒளிர்கின்றார். ஆகையால் அவரை “அறிவ” தென்பது நாம் நம்மையே அறிவதாகும். நம்மை நாம் அறிந்து கொள்ள பகவான் நமக்கு வகுத்துத் தந்துள்ள சாதனை முறைகள் பல. அன்பர்கள்பால் அவர் கருணையுள்ளம் பூண்டு தன்னுபதேசங்கள் காலப்போக்கில் திரிபுறாவண்ணம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பாடல்களாகப் பற்பல அமைப்பில் வடித்துத் தந்துள்ளார். அவையாவும் துதிப்பாடல்களாகவும் மற்றும் உபதேச வெண்பாக்களாகவும் கீர்த்தனை வடிவிலும் ஸ்ரீ ரமண நூல்-திரட்டில் இடம் பெற்றுள்ளன.
இந்நூல்-திரட்டின் சிரவண, மனனங்களின் அளவற்ற ஆன்மீகப் பயனை உணர்ந்த அன்பர்கள் பலர், ஸ்ரீ பகவான் திருமேனி தாங்கியிருந்த காலத்திலேயே ”ஸ்ரீ ரமண சந்நிதிப் பாராயண முறை”யை ஏற்படுத்தி ஆன்மலாபம் அடைந்து வந்தனர். இது ஸ்ரீ பகவான் கந்தாசிரமத்திலிருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டதாகும். கந்தாசிரமப் பாராயண முறையாக 1920 ஆம் ஆண்டு காலத்தில் அமைந்திலிருந்து. பிறகு ஸ்ரீ பகவான் அவ்வப்போது அன்பர்களுக்காக அருளிச் செய்த உபதேச நூல்களும் தக்க காலத்தில் தமிழ்ப்பாராயண முறையில் சேர்க்கப்பட்டு வந்தன.
இத்தமிழ்ப் பாராயணத்தில் கலந்துகொண்டு பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு அவற்றைச் சுலபமாக மனப்பாடம் செய்வதற்காக ஸ்ரீ பகவான், வெண்பாப் பாடல்களைக் கலிவெண்பா வடிவமாக அமைத்தும் மற்ற பாடல்களுக்குத் தலைப்புக் கவிகளையும் அருளியுள்ளார்.



No comments:

Post a Comment